கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
இதில் கொவிட் உயிரிழப்பு அதிகமாக பதிவான நாடாக அமெரிக்கா பதிவாகியுள்ளது.அங்கு 5,800 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, கொவிட் தொற்று நோய் பரவ தொடங்கிய 19 மாதங்களுக்குள், உலகளவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
தடுப்பூசிகள் இறப்பு விகிதத்தை குறைத்துள்ள போதிலும் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என சில சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தொற்று நோயின் உண்மையான உலகளாவிய இறப்பு எண்ணிக்கை அதிகாரபூர்வ பதிவுகளை விடவும் இரண்டு முதல் மூன்று மடங்குக்கும் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் மதிப்பிட்டுள்ளது.