May 24, 2025 19:12:34

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜப்பான் தேர்தல்: சுதந்திர ஜனநாயகக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி

ஜப்பான் பொதுத் தேர்தலில் சுதந்திர ஜனநாயகக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே ஆட்சியில் இருந்த சுதந்திர ஜனநாயகக் கட்சி 233 ஆசனங்களைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

இதன் மூலம் கூட்டணிகள் அமைக்காமல் மீண்டும் ஆட்சியமைக்கும் பலத்தைப் பெற்றுள்ளது.

ஜப்பானின் புதிய பிரதமராகவும் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் கடந்த மாதம் பதவியேற்ற புமியோ கிஷிதா அவசரமாக தேர்தலுக்குச் சென்றார்.

ஆளும் கட்சியாக இருந்த சுதந்திர ஜனநாயகக் கட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பாரிய விமர்சனங்களை எதிர்கொண்டது.

எனினும் 64 வயதுடைய புமியோ கிஷிதா, கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று 1 மாதத்தில் பெரும்பான்மை பலத்துடன் தேர்தலை வெற்றிகொண்டுள்ளார்.