உலகின் மிகப் பெரும் பொருளாதாரங்களைக் கொண்ட ஜி20 நாடுகளின் மாநாடு இன்று இத்தாலியில் ஆரம்பமானது.
இரண்டு நாள் மாநாடு இத்தாலியின் பிரதமர் மாரியோ ட்ராகியின் உரையுடன் ஆரம்பமாகியுள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து அரச தலைவர்கள் நேருக்கு நேர் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பருவநிலை மாற்றம் மற்றும் கொரோனா தடுப்பு என்பன மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள பிரதான விடயங்களாகும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் 19 நாடுகளை இணைத்ததே ஜி20 நாடுகளின் கூட்டணி.
சீன ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோர் மாநாட்டில் நேரடியாக பங்கேற்காமல், இணையவழியில் இணைந்துகொள்வதாக தெரிவித்துள்ளனர்.