file photo
மீன்பிடி உரிமைகள் தொடர்பான சர்ச்சை பிரிட்டனின் உலகளாவிய நம்பகத்தன்மைக்கு ஒரு சோதனை என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிட் உடன்படிக்கை அமுலாக ஆரம்பித்ததைத் தொடர்ந்து பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையே முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
பிரான்ஸிய மீனவர்களுக்கு பிரிட்டனின் கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு அனுமதிப் பத்திரங்களை வழங்க பிரிட்டன் மறுத்ததைத் தொடர்ந்து முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன், அதன் நலன்களை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்தையும் செய்யும் என்று போரிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
பிரெக்ஸிட் உடன்படிக்கையின் உறுதிமொழிகளில் இருந்து பிரிட்டன் பின்வாங்குவது நம்பகத்தன்மையின் அடையாளம் அல்ல என்று இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.