கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் ஸ்பெயின் அவசரகால நிலையை அறிவித்துள்ள அதேவேளை, இரவு நேர ஊரடங்கு சட்டத்தினையும் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.
இன்று இரவு முதல் இந்த நடைமுறைகள் அமுலுக்கு வருவதாக அறிவித்துள்ள பிரதமர், உள்ளுர் அதிகாரிகள் அவசியம் என்றால் பிராந்தியங்களுக்கு இடையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட சட்டங்களை ஆறு மாதங்களுக்கு நீடிப்பதற்கான பாராளுமன்றத்தின் அனுமதியை கோரவுள்ளதாக வும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
முதலாம் சுற்று கொரோனா வைரஸ் பரவலின் போது மிகமோசமான பாதிப்புகளை சந்தித்துள்ள ஸ்பெயின் பல ஐரோப்பிய நாடுகளை போல இரண்டாவது சுற்று பரவலை எதிர்கொண்டுள்ளது.
ஒரு மில்லியனிற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்ட முதலாவது நாடு ஸ்பெயின் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனிற்கும் அதிகமாயிருக்கலாம் என பிரதமர்
குறிப்பிட்டுள்ளார்.
ஸ்பெயினில் இதுவரை 35,000 பேர் கொரோனா வைரஷினால் உயிரிழந்துள்ளனர்.எனினும் உண்மையான எண்ணிக்கை இதனை விட பல மடங்கு அதிகம் என்ற கருத்துக்களும் வெளியாகியுள்ளன.