
சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
தமது நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றியுள்ளதாக அதன் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் இணைய உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அண்மைக் காலமாக செய்திகள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த இணைப்பு மாநாடு நேற்று நடைபெற்ற போது, அதில் உரையாற்றிய மார்க் ஜூக்கர்பர்க், தமது நிறுவனத்தின் பெயரை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நிறுவனத்தின் பெயர் மாறியுள்ளதே தவிர, அந்த நிறுவனத்தின் கீழ் இயங்கும் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் அகிய சமூக வலைத்தளங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.