January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

சீனாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டீசல் விலை உயர்வால் நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையங்கள் டீசல் விநியோகத்தை மட்டுப்படுத்த முடிவு செய்துள்ளதன் காரணமாக இவ்வாறு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

பல லொரி ஓட்டுநர்கள் எரிபொருள் நிரப்புவதற்கு ஒரு நாள் முழுவதும் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவின் கடுமையான பற்றாக்குறையால் சீனாவில்  தொழிற்சாலைகள் மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோடு, வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதிலும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

தற்போது சீனாவில் நிலவும் டீசல் தட்டுப்பாடு சீனப் பொருட்களின் விலையிலும் தாக்கம் செலுத்தும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.