photo: Facebook/ Rishi Sunak
பிரிட்டனின் பொருளாதாரம் இந்த வருட இறுதியில் கொரோனாவுக்கு முன்னைய நிலையை அடையும் என்று நிதி அமைச்சர் ரிஷி சுனாக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டில் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி 4 வீதமாக கணிக்கப்பட்டிருந்த நிலையில், வரவு- செலவுக்கான அலுவலகம் அதனை 6.5 வீதமாக உயர்த்தியுள்ளது.
பொருளாதாரத்தில் கொரோனா தொற்றின் தாக்கத்தை 3 வீதத்தில் இருந்து 2 வீதமாக பிரிட்டன் குறைத்துள்ளது.
மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் என்பதை நிதி அமைச்சர் ரிஷி சுனாக் ஒப்புக்கொண்டுள்ளார்.
பிரிட்டனின் பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட 6 மாதங்கள் முன்னதாகவே கொரோனாவுக்கு முன்னைய நிலைய அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா முடக்கம் மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி போன்றன வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதில் தாக்கம் செலுத்தியுள்ளதாக சுனாக் சுட்டிக்காட்டியுள்ளார்.
2021 வரவு- செலவுத் திட்டத்தின் ஊடாக பிரிட்டிஷ் மக்களுக்கு பலமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.