சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்கு அமெரிக்க நிபுணர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐந்து வயது மற்றும் ஐந்து முதல் பதினொரு வயது வரையான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதை அமெரிக்க நிபுணர்கள் அனுமதித்துள்ளனர்.
குறித்த நிபுணர்களின் பரிந்துரைகளுக்கு அமைய அமெரிக்க உணவு மற்றும் மருந்து பரிபாலன சபை மற்றும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது.
பைசர் தடுப்பூசி வழங்கப்பட்ட வயோதிபர்கள் மற்றும் இளைஞர்களில் 90 வீதமானோரிடையே வினைத்திறன்மிக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி அனுமதிக்கப்படும் போது, 15 மில்லியன் தடுப்பூசிகளைப் பகிர்ந்தளிக்க பைசர் நிறுவனம் தயாராக உள்ளது.
அமெரிக்காவில் 5 முதல் 11 வயது வரையான சிறுவர்களில் 1.8 மில்லியன் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
நவம்பர் மாதம் முதலாம் வாரம் முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்க அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.