July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஆபத்தான பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த கார்பன் பயன்பாட்டைக் குறைப்போம்’: ஐநா அழைப்பு

உலகம் எதிர்கொண்டுள்ள ஆபத்தான பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த கார்பன் பயன்பாட்டைக் குறைப்பதற்கு நாடுகள் முன்வர வேண்டும் என்று ஐநா அழைப்பு விடுத்துள்ளது.

கார்பன் பயன்பாட்டைக் குறைப்பதற்கான தேசிய திட்டங்களை நாடுகள் கொண்டிருக்க வேண்டும் என்று ஐநா சுற்றுச்சூழல் திட்டம் குறிப்பிட்டுள்ளது.

உலகின் வெப்பநிலை அதிகரிப்பை இந்த நூற்றாண்டில் 1.5 செல்சியஸுக்கு குறைவாகப் பேணும் உறுதிமொழிகள் தோல்வியடையக் கூடும் என்று ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

உலகின் வெப்பநிலை 2.7 செல்சியஸால் அதிகரிக்கும் போது, பெரும் அழிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

நீண்ட கால திட்டத்துடன் பூச்சியம்- கார்பன் இலக்குகளை அடைந்தால், வெப்பநிலை அதிகரிப்பை கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும் ஐநா சுற்றுச்சூழல் திட்டம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.