June 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சூடான் ஆட்சிக் கவிழ்ப்பு: இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி- 80 பேர் காயம்

சூடான் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து இடம்பெறும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இராணுவத்தினரின் துப்பாக்கிச் மூவர் பலியாகியுள்ளதுடன் 80 க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

சூடானில் கூட்டு படையொன்று பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சிலரைக் கைது செய்து, நேற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

இராணுவத்தினர் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அவசரகால நிலையிலும் பொதுமக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்கி, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வோரை இராணுவம் கைது செய்து வருவதோடு, வீட்டுக்கு வீடு சோதனை நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது.

சூடானின் இராணுவ புரட்சியை உலக நாடுகள் கண்டித்துள்ளதோடு, அமெரிக்கா சூடானுக்கான 700 மில்லியன் டொலர் உதவியையும் இடைநிறுத்தியுள்ளது.

சூடானின் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதோடு, சர்வதேச விமானப் பயணங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

அங்கு இணைய மற்றும் தொலைத்தொடர்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.