சிரியாவில் அமெரிக்க படையினர் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் அல்-கைதா சிரேஷ்ட தலைவர் அப்துல் ஹமீட் அல்மதார் கொல்லப்பட்டுள்ளார்.
எம்கியு-9 ரக விமானம் ஒன்றின் மூலம் அல்-கைதா இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தாக்குதலில் வேறு உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை என்று அமெரிக்க படையினர் தெரிவித்துள்ளனர்.
சிரியாவின் தென் பகுதியில் உள்ள காவல் நிலையம் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகளுக்கு அல்-கைதா தொடர்ந்தும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சிரியாவில் மறைந்திருப்பதாகவும் அமெரிக்க இராணுவ மேஜர் ஜோன் ரிக்ஸ்பீ தெரிவித்துள்ளார்.