November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சீனாவின் தாக்குதலில் இருந்து அமெரிக்கா தாய்வானைப் பாதுகாக்கும்’: ஜோ பைடன்

சீனா தாய்வானைத் தாக்கினால், அமெரிக்கா தாய்வானைப் பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவின் நீண்ட கால வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டுடன் முரண்படுவதாக கருதப்படுகிறது.

எனினும், அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு, வெளியுறவுக் கொள்கையில் எந்தவொரு மாற்றத்தையும் குறிக்கவில்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

தாய்வானின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உதவும் சட்டம் ஒன்றை அமெரிக்கா கொண்டுள்ளது.

சீனா தாய்வானைத் தாக்கும் போது அமெரிக்கா என்ன செய்ய வேண்டும் என்பது, குறித்த சட்டத்தில் தெளிவற்றதாகவே உள்ளது.

சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையிலான அமைதியின்மை அதிகரித்துள்ளது.

சீன போர் விமானங்கள் தாய்வானின் வான் பரப்புக்குள் அடிக்கடி வட்டமிடுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தாய்வான் தன்னை ஒரு சுதந்திர நாடாக கருதும் போது, சீனா தாய்வானை தன்னில் இருந்து பிரிந்துள்ள மாநிலமாகவே கருதுகிறது.

இந்நிலையிலேயே, அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.