May 11, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்து முழுமையாக வெளியேறி ஜனாதிபதியை அறிவித்தது பாபடோஸ்

பிரிட்டிஷ் காலனித்துவத்தில் இருந்து முழுமையாக வெளியேறி, பாபடோஸ் அதன் முதலாவது ஜனாதிபதியை அறிவித்துள்ளது.

பாபடோஸ் குடியரசின் முதலாவது ஜனாதிபதியாக டேம் சேன்ட்ரா மேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாபடோஸ் பிரிட்டினில் இருந்து சுதந்திரமடைந்து 55 வருடங்கள் கடந்தாலும், இதுவரை காலமும் பிரிட்டிஷ் மகாராணியே பாபடோஸ் நாட்டின் அரச தலைவராக இருந்தார்.

பாபடோஸின் 55 ஆவது சுதந்திர தினத்தில் டேம் சேன்ட்ரா மேசன் ஜனாதிபதியாகப் பதவியேற்கவுள்ளார்.

காலனித்துவத்தில் இருந்து முழுமையாக வெளியேறி, குடியரசாகுவதாக பாபடோஸ் அரசாங்கம் கடந்த வருடம் அறிவித்திருந்தது.

2 இலட்சத்து 85 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட பாபடோஸ், கரீபியன் தீவுகளில் அதிகமான சனத்தொகை கொண்ட வளமான நாடாகும்.