அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிய சமூக ஊடக தளமொன்றை உருவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.
தான் ட்ருத் சோஷியல் (TRUTH Social) எனும் சமூக வலைத்தளத்தை உருவாக்கவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சமூக வலைத்தளங்கள் எதிர்த் தரப்பின் குரல்களை அடக்குவதாக குற்றம்சாட்டியுள்ள ட்ரம்ப், தனது புதிய வலைத்தளம் ‘பெரும் தொழில்நுட்பத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக நிற்கும்’ என்று கூறியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் தலைமை வகிக்கும் ட்ரம்ப் மீடியா மற்றும் தொழில்நுட்ப குழு, மாதாந்த சந்தா செலுத்தி பார்க்கும் வீடியோ சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.
பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் இருந்து ட்ரம்பின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வானதொரு தீர்மானத்துக்கு வந்துள்ளார்.