July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேஸ்புக்கின் பெயர் மாறுகிறதா?: பேஸ்புக் நிறுவனம் விளக்கம்

பிரபல சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அதன் பெயரை மாற்றத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த மாநாட்டில், அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் ஸகர்பேர்க் இதுதொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியை ஆரம்பத்தில் பேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது.

மேலும், ‘தாம் வதந்திகள் மற்றும் ஊகங்களுக்குப் பதிலளிப்பதில்லை’ என்றும் பேஸ்புக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஒரு தாய் நிறுவனத்தின் கீழ் செயற்படவுள்ளதாகவும் அதனுடன் இணைந்து இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப், ஒகூலஸ் போன்ற செயலிகள் இயங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தக நடைமுறைகள் மீது அமெரிக்க அரசாங்கத்தின் கண்காணிப்பு அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்த செய்தி வெளியாகியுள்ளது.

கூகுல் நிறுவனம் அதன் சேவை விரிவாக்கத்தின் ஒரு அங்கமாக 2015 ஆம் ஆண்டில் அல்பபெட் எனும் துணை நிறுவனத்தை நிறுவியது.

சேவை விரிவாக்கம் இடம்பெறும் போது பெரும் நிறுவனங்கள் தங்கள் பெயர்களை மாற்றிக்கொள்வது என்பது ஒரு சாதாரண அம்சமாகக் கருதப்படுகிறது.