July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அனுப்பக் கூடிய தொலைதூர ஏவுகணையை பரிசோதித்தது வட கொரியா

நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அனுப்பக் கூடிய தொலைதூர ஏவுகணை ஒன்றை வட கொரியா பரிசோதித்துள்ளது.

தொலைதூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைப் பரிசோதனை வெற்றியளித்ததாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய ஏவுகணையை பின்தொடரவோ கண்காணிக்கவோ முடியாது என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

தொலைதூர ஏவுகணைப் பரிசோதனைகள் ஆபத்தானவை என்று ஐநா தெரிவித்துள்ள நிலையிலும் வட கொரியா பரிசோதனைகளைத் தொடர்கிறது.

அண்மைக் காலமாக வட கொரியா முன்னெடுத்து வரும் ஏவுகணைப் பரிசோதனைகள் பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஜப்பானின் கடற்பரப்புக்குள் தொலைதூர ஏவுகணைகளை ஏவியதாக வட கொரியா மீது குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் சில ஏவுகணைப் பரிசோதனைகளால் சர்வதேச தடைகள் கடுமையாக மீறப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.