April 29, 2025 10:25:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவல் காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவல் திங்கட்கிழமை காலமானார்.

கொலின் பவல் கொவிட் தொற்று காரணமாக நேற்று காலை மரணித்ததாக அவரது குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் அவர் குருதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிதிருந்ததாகவும், அதனை தொடர்ந்து கொவிட் தொற்றுக்கு உள்ளானதால் உடல்நிலை மோசமடைந்ததாகவும் அமெரிக்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இவர் 2001 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஆட்சிக்காலத்தில் இராஜாங்க செயலாளராக தெரிவானதோடு, இராஜாங்க செயலாளரான முதலாவது ஆபிரிக்க- அமெரிக்கரும் ஆவார்.

அமெரிக்காவின் சுபீட்சத்துக்காகவும் அதன் நலனுக்காகவும் பல சேவைகளை பவல் ஆற்றியுள்ளதாக அமெரிக்க உயரதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

போர்வீரர் மற்றும் இராஜதந்திரி என இரு உயர் இலட்சியங்களை கொண்டவராக பவல் செயற்பட்டார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.