July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

அவுஸ்திரேலியா வரலாற்றில் முதற்தடவையாக பெருந்தொகை ஹெரோயின் போதைப் பொதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் துறைமுகத்திற்கு வந்த கொள்கலன் பெட்டியொன்றில் இருந்து 450 கிலோ ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டைல்ஸ்களுடனான கொள்கலன் ஒன்றில் குறித்த ஹெரோயின் தொகை கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர், இது தொடர்பில் சந்தேகத்தில் மலேசிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரெலியா வரலாற்றில் முதற்தடவையாகவே இந்தளவான போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட ஹெரோயினின் பெறுமதி 104 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.