July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவ ஆட்சியை வலியுறுத்தி சூடானில் போராட்டம்!

சூடானில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் கைப்பற்ற வேண்டுமென வலியுறுத்தி அங்கு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சூடான் தலைநகரான கார்டோமில் இருக்கும் அதிபர் மாளிகைக்கு முன்னால், சனிக்கிழமை கூடிய ஆயிரக் கணக்கான மக்கள், இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2019 ஆம் ஆண்டில் ஒமர் அல் பஷீரின் ஆட்சி கலைக்கப்பட்ட பின், சுதந்திரம் மற்றும் மாற்றத்துக்கான படை என்று அழைக்கப்படும் கூட்டமைப்பு சூடானை ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில், கடந்த செப்டம்பரில் இராணுவப் புரட்சியொன்றின் மூலம் ஆட்சியை கவிழ்க்க சதிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்து, அந்த முயற்சியை தோற்கடித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு அரசியல் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது.

இவ்வாறான நிலைமையிலேயே இராணுவத்தினர் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“எங்களுக்கு இராணுவ ஆட்சி வேண்டும், தற்போதைய அரசு நீதி மற்றும் சமத்துவத்தை எங்களுக்கு வழங்கவில்லை” என ஒரு போராட்டக்காரர்கள் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.