தென் கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பான ஆசியானின் மாநாட்டில் இருந்து மியன்மார் இராணுவ ஜெனரல் நீக்கப்பட்டுள்ளார்.
மியன்மாரில் இராணுவப் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றிய ஜெனரல் மின் ஆங் ஹிலெங் இவ்வாறு நீக்கப்பட்டுள்ளார்.
ஜெனரல் மின் ஆங் ஹேலிங்கிற்கு பதிலாக மியான்மரில் இருந்து அரசியல் சார்பற்ற பிரதிநிதி ஒருவரை அழைக்க ஆசியான் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
மியான்மரில் ஏற்பட்ட கொந்தளிப்பை முடிவுக்கு கொண்டுவருவதில் இராணுவம் போதியளவு செயற்படவில்லை என்று ஆசியான் குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டில் வன்முறை, ஒடுக்குமுறை போன்றவற்றை முடிவுக்குக் கொண்டுவரவும், அரசியல் கைதிகளை விடுவிக்கவும் ஜெனரல் மின் ஆங்கிடம் ஆசியான் வலியுறுத்தியுள்ளது.