January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரித்தானியா எம்பி டேவிட் அமெஸ் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணம்

தொகுதி மக்களுடனான கூட்டத்தின் போது கத்தியால் குத்துக்கு இலக்காகி பிரித்தானியாவின் கன்சர்வேடிங் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சேர் டேவிட் அமெஸ் உயிரிழந்துள்ளார்.

எசெக்ஸில் உள்ள தனது தொகுதியில் தேவாலயமொன்றில் மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த போதே டேவிட் அமெஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்தக் கூட்டத்திற்குள் திடீரென நுழைந்த நபர் ஒருவர், கத்தியால் டேவிட் அமெஸ் மீது பலமுறை தாக்குதல் நடத்தியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த 69 வயதான டேவிட் அமெஸ்க்கு அந்த இடத்திலேயே 2 மணிநேரத்திற்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இதன்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் எசெக்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்துள்ள பொலிஸார் அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.