July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லெபனான் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி, 32 பேருக்கு காயம்; துக்க தினமாக அறிவிப்பு

லெபனானின் தலைநகர் பைரூத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமல் என்ற ஷியா முஸ்லிம் குழுக்கள் நீதவான் ஒருவருக்கு எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மீதே துப்பாக்கி சூட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து பிரதமர் நாஜிப் லெபனானில் இன்று துக்க தினமாக அறிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கிறிஸ்தவ லெபனீஸ் படை என்ற ஆயுதக் குழு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

எனினும், அந்தக் குழு இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்க மறுத்துள்ளது.

‘எவரும் தமது சொந்த நலன்களுக்காக நாட்டை பிணைக் கைதி போன்று நடத்துவதை அனுமதிக்க மாட்டோம்’ என்று லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன் தெரிவித்துள்ளார்.