வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் “வெல்ல முடியாத இராணுவத்தை” உருவாக்குவதற்கு உறுதியளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஆயுத மேம்பாடு தற்காப்புக்காகவே தவிர போரைத் தொடங்குவதற்காக அல்ல என்றும் கிம் ஜாங் கூறினார்.
பல விதமான பெரிய ஏவுகணைகள் காட்சிப்படுத்தும், வடகிழக்கு தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்ற தற்காப்பு 2021 கண்காட்சியில் பேசும் போதே கிம் இதனை தெரிவித்தார்.
தனது உரையில், வட கொரியா தனது அண்டை நாடுகளுடன் சண்டையிட விரும்பவில்லை என்றும் கிம் ஜாங் குறிப்பிட்டுள்ளார்.
வட கொரியா சமீபத்தில் புதிய ஹைப்பர்சோனிக் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் சோதித்தது. அத்தோடு தனது சொந்த நீர்மூழ்கிக் கப்பல் ஏவப்பட்ட ஆயுதத்தையும் சோதனைக்கு உட்படுத்தியது.