ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள பள்ளிவாசலொன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், குறைந்தது 100 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுபான்மை ஷியா முஸ்லீம் சமூகத்தால் பயன்படுத்தப்படும் பள்ளிவாசலொன்றிலேயே இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் இந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.