அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தென் சீனக் கடலில் கடலுக்கடியில் அடையாளம் தெரியாத பொருளுடன் மோதியுள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மாலுமிகள் பலர் காயமடைந்தள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த விபத்து ஒக்டோபர் 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், மோதிய பொருள் என்ன என்று சரியாக இன்னமும் கண்டறியப்படவில்லை.
எனினும் நீர்மூழ்கிக் கப்பலின் அணு உலை சேதமடையவில்லை எனவும் கப்பல் “முழுமையாக செயல்படுகிறது” எனவும் அமெரிக்க கடற்படை தரப்பு தெரிவிகின்றது.
இந்த கப்பல் இப்போது குவாமில் உள்ள அமெரிக்க தளத்திற்கு செல்கிறது என்று யுஎஸ்என்ஐ செய்தி தெரிவிக்கிறது.