July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார் டெக்சாஸ் நீதவான்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெண்கள் கருக்கலைப்பில் ஈடுபடுவதற்கு எதிராக புதிதாக கொண்டு வரப்பட்ட சட்டமூலத்தை நீதவான் ஒருவர் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தில் கருவுற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் பெண்கள் கருக்கலைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டமூலமொன்று ரிபப்லிகன் அரசியல்வாதிகளால் செம்டெம்பர் மாதம் முதலாம் திகதி கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த சட்டமூலத்துக்கு எதிரானவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த சட்டமூலத்தின் சட்டபூர்வத்தன்மை சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், அதனை அமலாக்குவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகம் மாநில நீதவான் ரொபர்ட் பிட்மனை கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், நீதவான் ரொபர்ட் பிட்மன் சட்டமூலத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளார்.

நீதவானின் இந்த தீர்மானத்தை வெள்ளை மாளிகையும் வரவேற்றுள்ளது.

“போராட்டம் இப்போது தான் ஆரம்பித்துள்ளது. டெக்சாஸ் மற்றும் அமெரிக்காவின் ஏனைய மாநிலங்களிலும் பெண்களின் சுதந்திரத்துக்கான குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன” என்று வெள்ளை மாளிகையின் செயலாளர் ஜென் ஸாகி தெரிவித்துள்ளார்.