Photo: Twitter
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தால் 20 பேர் உயிரிழந்துடன், 300க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
5.8 என்று ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவாகியுள்ளது.
இந்த பூகம்பம் ஏற்பட்டபோது தலைநகர் இஸ்லாமாபாத் மட்டுமின்றி பல்வேறு நகரங்களையும் அதிரச் செய்துள்ளது.
இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.
பூகம்பம் ஏற்பட்ட உடன் பலுசிஸ்தான் மாநிலத்தில் வீடுகள், கடைகள், வர்த்தக கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளன நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.