ஐக்கிய அமெரிக்க பாடகர் ரொபர்ட் கெல்லியின் உத்தியோகப்பூர்வ கணக்குகளை யூடியுப் நிறுவனம் நீக்கியுள்ளது.
ரொபர்ட் கெல்லியின் RKellyTV மற்றும் RKelly Vevo ஆகிய இரண்டு கணக்குகளும் யூடியுபில் இருந்து நீக்கப்பட்டதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாடகர் ரொபர்ட் அவரது பிரபல்யத்தைப் பயன்படுத்தி இரண்டு தசாப்தங்களாக பெண்கள் மற்றும் சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் குற்றம்சாட்டப்பட்டது.
பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்தே, அவரது கணக்குகள் நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அவரது பாடல்கள் அடங்கிய அட்டவணை யூடியுபில் காணப்படும் என்பதோடு, ரசிகர்களால் பதிவேற்றப்பட்ட பாடல்கள் அடங்கிய காணொளிகள் நீக்கப்படாது எனவும் யூடியுப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.