ஜெருசலேமில் 2,700 ஆண்டுகள் பழமையான தனி அறை கழிப்பறை ஒன்றை இஸ்ரேலிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பழைய நகரத்தை அடையாளப்படுத்தும் மாளிகை ஒன்றின் இடிபாடாக இது இருக்கலாம் என இஸ்ரேலிய தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது.
சுண்ணாம்புக் கற்களினால் வடிவமைக்கப்பட்டுள்ள கழிப்பறையின் கீழ் பகுதியில் ஆழமான குழி அமைக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
கழிப்பறை வசதியுடன் கூடிய பழமையான தனிஅறைகள் இதுவரை மிகவும் அரிதாகவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சி பணிப்பாளர் யாகோவ் பில்லிக் தெரிவித்துள்ளார்.
பண்டைய காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே கழிப்பறைகளை அமைக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
குறித்த பகுதியில் கிடைக்கும் தொல்பொருட்களை கொண்டு அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, உணவு மற்றும் பழங்கால நோய்கள் குறித்து அறிய முடியும் என்று தொல்பொருள் ஆணையம் தெரிவித்துள்ளது.