ரஷ்ய படக்குழு ஒன்று விண்வெளியில் 12 நாட்கள் படப்பிடிப்புக்களை நடத்துவதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளது.
இதையடுத்து விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தும் உலகின் முதலாவது நாடாக ரஷ்யா வரலாறில் இடம்பிடித்துள்ளது.
‘The Challenge’ எனப்படும் திரைப்படத்தின் காட்சிகள் இவ்வாறு விண்வெளியில் படமாக்கப்பட உள்ளன.
ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் (Roscosmos ) ‘சோயுஸ் எம்எஸ் -19′ (Soyuz MS-19) விண்கலம் செவ்வாய்க்கிழமை கஜகஸ்தானில் உள்ள பைக்கோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து பயணித்தது அடுத்த மூன்று மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளது.
இந்த பயணத்தை நடிகை யூலியா பெரெசில்ட் (Yulia Peresild), தயாரிப்பாளர் கிளிம் ஷிபென்கோ (Klim Shipenko) மற்றும் விண்வெளி வீரர் அன்டன் ஷ்காப்லெரோவ் (Anton Shkaplerov) ஆகியோர் முன்னெடுத்துள்ளனர்.
முன்னதாக அமெரிக்காவின் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் ‘மிஷன் இம்பாசிபிள்’ என்ற திரைப்படக் காட்சியை விண்வெளியில் படமாக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.