January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேஸ்புக், வாட்ஸ்அப் திடீரென முடங்கின!

பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன திடீரென முடங்கியுள்ளன.

இது தொடர்பில் உலகளாவிய ரீதியில் பயனாளர்கள், டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

திங்கட்கிழமை மாலை முதல், தமது பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இயங்கவில்லை என்று பலரும் கூறிவருகின்றனர்.

பேஸ்புக் வலைத்தளத்திற்குள் பிரவேசிக்கும்போது, “மன்னிக்கவும், நாங்கள் முடிந்தவரை தொழில்நுட்ப சிக்கலை சரிசெய்கின்றோம்” என்ற செய்தி காட்டப்படுவதாக பயனாளர்கள் கூறுகின்றனர்.

வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன இயங்கினாலும், தகவல்களை பகிர்ந்து கொள்ளவோ ஏனைய வசதிகளை பயன்படுத்தவோ முடியவில்லை.

முதலாவது முறைப்பாடு பதிவானதை தொடர்ந்து #facebookdown என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. பயனர்கள் இதன் ஊடாக முறைப்பாடுகளை பதிவிட்டுவருகின்றனர்.

இந்த சிரமத்திற்கு மன்னிப்பு கோருவதாக  பேஸ்புக் தகவல் தொடர்பு நிர்வாக இயக்குனர் ஆண்டி ஸ்டோன்  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கூடிய விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும்  அவர் கூறியுள்ளார்.