Photo : Web/ nobelprize.org
2021 ஆம் ஆண்டின் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசை அமெரிக்க விஞ்ஞானிகளான டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோர் வென்றுள்ளனர்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோனலின்ஸ்கா நிறுவனத்தில் இருந்து நோபல் பரிசுக்கான தெரிவுக் குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் (சென்சார்) கண்டுபிடித்ததற்காக டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் படபூட்டியன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு ஹிபாடைடிஸ் வைரஸுக்கு எதிராக கண்டுபிடிப்புகளைச் செய்தமைக்காக கூட்டாக அறிவிக்கப்பட்டது.