ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா இன்று உத்தியோகப்பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
புமியோ கிஷிடா ஜப்பானின் 100 ஆவது பிரதமர் ஆவார்.
பிரதமராக இருந்த யொஷ்ஹிதே சூகா பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இவர் பதவிக்கு வந்துள்ளார்.
பிரதமராகப் பதவியேற்ற புமியோ கிஷிடா, இம்மாதம் 31 ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கு அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் பாராளுமன்றத்தை அடுத்த வாரம் கலைப்பதாகவும் பிரதமர் அறிவித்துள்ளார்.
பிரதமராகப் பதவியேற்றதுடன் கொவிட் தொற்றுக்கு மத்தியில் தேர்தல் அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சூ அபேவுக்கு அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவி கிடைக்கவுள்ளதாகவும் தெரியவருகிறது.