November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘லா பால்மா’ எரிமலை குமுறல்: இரண்டு புதிய வெடிப்புகளில் இருந்து குழம்புகள் வெளியேற்றம்!

ஸ்பெயினின் கேனரி தீவுகளில் ஒன்றான லா பால்மாவின் ‘கும்ப்ரே வீஜா’ எரிமலையில் இருந்து இரண்டு புதிய துவாரங்கள் உருவாகியுள்ளன.

இந்த புதிய தூவாரங்கிளின் ஊடாக வெளியாகும் எரிமலை குழம்புகள் தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெடிப்புகளினால் உருவாகும் சாம்பல் 6,000 மீட்டர் வரை காற்றில் பரவலடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலை செப்டம்பர் 19 அன்று குமுறத் தொடங்கியது. அதன் பாதையில் நூற்றுக்கணக்கான வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் நகரங்களை அழிவுக்கு உட்படுத்தி அது, அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்து வருகின்றது.

தீவில் உள்ள மக்கள் எரிமலை சாம்பலில் இருந்து பாதுகாப்பு பெற கண் மற்றும் முகக்கவசம் அணியும் படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 6,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஆகியரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியளவாகவோ அழிவடைந்துள்ளது.

புதிய துவாரங்கள் காரணமாக சேதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய எரிமலை வெடிப்பானது இதற்கு முன்னர் 1971 இல் அங்கு ஏற்பட்ட  எரிமலை வெடிப்பை விடவும் இரு மடங்கு அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.