June 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கருக்கலைப்பு உரிமைக்காக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள்

கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குமாறு வலியுறுத்தி அமெரிக்காவில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து மாநிலங்களிலும் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரிக்கும் அமைப்புகளினால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

கருக்கலைப்பை தடை செய்த டெக்சாஸ் மாநிலத்தின் புதிய சட்டத்திற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படக்கூடுமென, அச்சட்டத்திற்கு ஆதரவானவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா முழுவதிலும் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய 1973 ஆண்டில் இடம்பெற்ற வழக்கின் தீர்ப்பை மாற்றியமைப்பதற்கான விசாரணைகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் எதிர்வரும் மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளது.

இந்நிலையில் வொஷிங்டனில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.