January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தீர்மானம்

Photo: Facebook/Rody Duterte

அரசியலில் இருந்து தான் ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடெர்ட் அறிவித்துள்ளார்.

இதன்படி அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் துணை ஜனாதிபதி பதவிக்கு தான் போட்டியிட மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி பதவியின் இரண்டாவது தவணைக்காக போட்டியிட முடியாது.

எனினும் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியும் என்பதனால், 2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தான் அந்தப் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி ரொட்ரிகோ கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இருப்பினும், தாம் அதற்கு தகுதியற்றவர் என்ற கருத்து பிலிப்பைன்ஸ் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதனால், போட்டியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மகள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஊகங்கள் வலுப்பெற்று வரும் நிலையிலேயே, அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

குற்றங்களை ஒழித்தல், பிலிப்பைன்ஸில் புரையோடிப்போயிருந்த போதைப்பொருள் கடத்தல் நெருக்கடியை சீர்செய்தல் என்ற பிரசாரத்துடன், ஒரு வலிமையான தலைவராக கருதப்பட்ட இவர் 2016 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்தார்.