July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜோ பைடனின் அபிவிருத்தித் திட்டங்கள் மீதான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பில் காலதாமதம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உட்கட்டமைப்புத் திட்டங்கள் மீதான நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் குறித்த திட்டத்துக்கு 1 டிரில்லியன் அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கான வாக்கெடுப்பு நேற்று இடம்பெற இருந்தது.

எனினும், டெமொக்ரடிக் தலைவர்களில் ஒரு பிரிவினர் இதற்கான வாக்கெடுப்பைத் தள்ளிப் போட்டுள்ளனர்.

உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் சட்டவாக்க உறுப்பினர்களிடையே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

டெமொக்ரடிக் உறுப்பினர்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சமாதானப்படுத்தும் முயற்சியில் சபாநாயகர் நேன்சி பெலோசி மற்றும் ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

சட்டவாக்க உறுப்பினர்கள் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுடன் 3.5 டிரில்லியன் டொலர் பெறுமதியான சமூக செலவீனத் திட்டத்தையும் எதிர்பார்க்கின்றனர்.

டெமொக்ரடிக் கட்சியின் பிரதான திட்டங்களில் ஒன்றாக உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் காணப்படும் நிலையில், வாக்கெடுப்பு தள்ளிப் போடப்பட்டுள்ளமை பைடனை சிக்கலில் தள்ளியுள்ளது.