July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொற்றுநோய்க்கு பின்னர் தமது சர்வதேச எல்லையை மீண்டும் திறக்க அவுஸ்திரேலியா முடிவு!

நவம்பர் மாதம் முதல் தனது சர்வதேச எல்லையை மீண்டும் திறக்க உள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 80 வீதத்தை எட்டும்போது மக்கள் சர்வதேச எல்லையை கடந்து பயணம் செய்ய தகுதியுடையவர்கனாக இருப்பார்கள் என்று அவுஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்று காரணமாக 2020 மார்ச் முதல், அவுஸ்திரேலியா மிகக் கடுமையான சட்டங்களுடன் தனது சர்வதேச எல்லை விதிகளை நடைமுறைப்படுத்தயது.

அந்நாட்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் தடை விதித்தது. இதனால் அவுஸ்திரேலியாவில் வாழும் அதிகமான மக்கள் தமது உறவுகளை சந்திக்கமுடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் முழுமையாக தடுப்பூசி எற்றிக்ககொண்ட குடிமக்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திரங்களை வழங்க அவுஸ்திரேலியா அரசு முன்வந்துள்ளது.

“அவுஸ்திரேலியர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கொடுக்க வேண்டிய நேரம் இது” என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் கொவிட் தொற்று காரணமாக 1,300 க்கும் மேற்பட்ட இறப்புகளும், 107,000 க்கும் அதிகமான தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நாடு உடனடியாக வெளிநாட்டவர்களுக்குத் திறக்கப்படாது, எனினும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது, ​​அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியும். இந்த நடைமுறையில் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதனால் பல்லாயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் தொடர்ந்தும் சிக்கியுள்ளனர்.