January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எக்குவடோர் குயாகுவில் சிறைச்சாலையில் இடம்பெற்ற குழு மோதலில் 116 கைதிகள் மரணம்

photo: Twitter/ Policía Ecuador

எக்குவடோர் குடியரசின் குயாகுவில் நகரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே இடம்பெற்ற குழு மோதலில் 116 கைதிகள் மரணமடைந்துள்ளனர்.

சிறைக் கைதிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை குழு மோதல் ஒன்று ஆரம்பித்துள்ளதோடு, நேற்று மோதல் கட்டுப்படுத்தப்பட்டதாக எக்குவடோர் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும், இன்று காலை மீண்டும் சிறைச்சாலைக்குள் வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குயாகுவில் சிறைச்சாலைக்கு 400 பொலிஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஆறு கைதிகளின் தலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் துப்பாக்கிச் சூடு மற்றும் கைக்குண்டு வெடிப்பு சம்பவங்களால் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

எக்குவடோர் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்க முடியுமான கைதிகளின் எண்ணிக்கையைவிட 30 வீதமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.