November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேனரி தீவு எரிமலை குமுறல் : கடலை அடையும் போது நச்சு வாயுக்கள் வெளியேறும் அபாயம்

(Photo : Twitter/World Meteorological Organization)
ஸ்பெயின் நாட்டில் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலையில் இருந்து வெளியான எரிமலை குழம்பு கடலில் கலக்கும் போது நச்சு வாயுக்களை உண்டாக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

கேனரி தீவுகளில் உள்ள லா பால்மா எரிமலை செப்டம்பர் 19 அன்று குமுறத் தொடங்கியது. அதன் பாதையில் நூற்றுக்கணக்கான வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் நகரங்களை அழிவுக்கு உட்படுத்தி அட்லாண்டிக் பெருங்கடலில் கலந்து வருகின்றது.

 

இதனால் நச்சு வாயுக்கள் வெளியேறி ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தோல் மற்றும் கண்களை எரிச்சலூட்டும் மற்றும் சுவாசத்தை பாதிக்கும் ஒரு இரசாயன எதிர்வினையை தூண்டும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

எரிமலை குழம்பு கடலில் கலக்கும் பிளேயா நியூவா பகுதியில் உள்ள மேகங்களின் நிறங்கள் மாற்றமடைந்துள்ளன.

இந்த ஆபத்தான விளைவுகளை தடுக்கும் வகையில் அப்பகுதிகளுக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 6,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

https://twitter.com/Brave_spirit81/status/1443144403770658818?s=20