
photo: Twitter/ Ankit Panda
ஒலியைவிட வேகமாகச் செல்லும் ஏவுகணையை தாம் வெற்றிகரமாகப் பரிசோதித்ததாக வட கொரியா அறிவித்துள்ளது.
ஹவாசாங்- 8 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணையை வட கொரியா நேற்று பரிசோதித்துள்ளது.
குறித்த ஏவுகணை ஒலியைவிட 5 மடங்கு வேகமாகச் செல்வதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் 5 வருட இராணுவ மேம்படுத்தல் திட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரதான ஏவுகணைகளில் ஒன்றாக ஹவாசாங்- 8 கருதப்படுகிறது.
குறித்த ஏவுகணையை வட கொரியா ‘மூலோபாய ஆயுதம்’ எனக் குறிப்பிட்டாலும், அது அணுவாயுத திறன் கொண்டதாகும்.
வட கொரியாவின் இடைவிடாத ஏவுகணை பரிசோதனையால் பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.