July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பிரான்ஸ்- கிரீஸ் கைச்சாத்து

பிரான்ஸ் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து மேற்கொண்ட கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் பிரான்ஸை இணைத்துக்கொள்ளாத நிலையில், இந்த புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

பிரான்ஸிடம் இருந்து 6-8 போர்க் கப்பல்களைக் கொள்வனவு செய்யவுள்ளதாக கிரீஸ் அறிவித்துள்ளது.

ஐரோப்பிய பாதுகாப்பு சுய அதிகாரத்தில் தாம் முதன் முறையாக நுழைவதாக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடகிஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் கிரீஸுக்கு இடையே 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்தாகியுள்ளது.

கிரிஸுக்கான 8 போர்க் கப்பல்களும் 2026 ஆம் ஆண்டாகும் போது, நிர்மாணித்து கையளிக்கப்படும் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய மூலோபாய பாதுகாப்பு தொடர்பான தனது குறிக்கோளை வலுப்படுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.