பிரிட்டனில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில், எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள இராணுவத்தினர் தயாராகியுள்ளனர்.
பிரிட்டனில் ஏற்பட்ட எரிபொருள் விநியோக நெருக்கடி நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் சாரதிகள் பல்வேறு காரணங்களைக் காட்டி, விநியோகத்தில் இருந்து விலகிக்கொண்டதைத் தொடர்ந்து எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒரு இலட்சத்துக்கு அதிகமான சாரதிகள் சேவையில் இருந்து விலகிக்கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 150 இராணுவ சாரதிகள் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.
எரிபொருள் விநியோகம் தடைப்பட்டதைத் தொடர்ந்து, மக்களின் எரிபொருள் கொள்வனவும் 500 வீதத்தால் அதிகரித்துள்ளது.
நான்காவது நாளாகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றது.
நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளதாக போக்குவரத்து செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடி நிலை காரணமாக பிரிட்டனில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது.