January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வட கொரியா கிழக்குக் கரையை நோக்கி ஏவுகணை ஏவியதாக தென் கொரிய இராணுவம் குற்றச்சாட்டு

வட கொரியா கிழக்குக் கரையை நோக்கி குறுந்தூர ஏவுகணை ஏவியதாக தென் கொரிய இராணுவம் குற்றம்சாட்டியுள்ளது.

தாம் ஏவுகணைப் பரிசோதனை மேற்கொண்டதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

தற்பாதுகாப்புக்காக ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்ள தமக்கு உரிமை இருப்பதாக வட கொரிய பிரதிநிதி ஐநாவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

செப்டம்பர் மாத ஆரம்பத்தில் இரு நாடுகளும் நெடுந்தூர ஏவுகணைகளைப் பரிசோதித்ததில் பிராந்தியத்தில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

தென் கொரியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வட கொரியா விருப்பம் தெரிவித்துள்ளது.

சட்ட விரோத ஆயுத திட்டங்கள் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துவதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.