
ஜெர்மனி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற சோசியல் டெமொக்ரட்ஸ் கட்சி அரசியல் கூட்டணி அமைக்க தயாராகி வருகிறது.
கிரீன்ஸ் மற்றும் லிபரல் கட்சிகளுடன் தாம் கூட்டணி அமைக்கவுள்ளதாக சோசியல் டெமொக்ரட்ஸ் கட்சியின் தலைவர் ஓலப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி தேர்தலில் எஞ்சலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர்மின் லஷெட் தோல்வியைத் தழுவியுள்ளார்.
எனினும், தாம் ஆட்சி அமைப்பது உறுதி என்று கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் ஆர்மின் லஷெட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சோசியல் டெமொக்ரட்ஸ் கட்சி 206 ஆசனங்களையும், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 196 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளன.
முன்னணி கட்சிகள் இரண்டும் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
கிரீன்ஸ் கட்சி 15 வீத வாக்குகளுடன் 118 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.