November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட்டுக்கு பின்னர் பல நாடுகளில் மக்களின் ஆயுட்காலம் வீழ்ச்சி!

கொரோனா மரண எண்ணிக்கை

கொவிட் நோய் தொற்றுக்கு பின்னர் பல நாடுகளில் மக்களின் ஆயுட்காலம் குறைந்து வருகின்றமை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் 2020 ல் உலகில் பதிவான “ஆயுட்காலம் மிக மோசமான சரிவு” இது என ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கின்றது.

திங்களன்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

2 ம் உலகப் போருக்குப் பின்னர் உலகில் மிக அதிகமான உயிரிழப்புகளை கொவிட் -19 தொற்று நோய்  ஏற்படுத்தியுள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வின்படி, அமெரிக்க ஆண்களின் ஆயுட்காலம் இரண்டு ஆண்டுக்கும் மேல் குறைந்துள்ளது.

ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சிலி ஆகிய 29 நாடுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தியதில் 22 நாடுகளில் உள்ள மக்களின் ஆயுட்காலம் 2019 உடன் ஒப்பிடும்போது ஆறு மாதங்களுக்கு மேல் குறைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 நாடுகளின் ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

பல்வேறு நாடுகளில் ஆயுட்கால குறைவு கொவிட் இறப்புகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.