
ஜெர்மனி பொதுத் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சியான சோசியல் டெமொக்ரட்ஸ் கட்சி, 25.7 வீத வாக்குளைப் பெற்று வெற்றியை நோக்கி நகர்கிறது.
இம்முறை தேர்தலில் சான்செலர் எஞ்சலா மெர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி வரலாற்றில் காணாத அளவுக்கு குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளது.
எஞ்சலா மெர்கலின் கட்சி 24.1 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
தாம் தெளிவான மக்கள் ஆணையைப் பெற்றுள்ளதாக சோசியல் டெமொக்ரட்ஸ் கட்சியின் தலைவர் ஓலப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
மெர்கலுக்கு அடுத்ததாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் சான்செலர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ள ஆர்மின் லஷெட் தாம் ஆட்சி அமைப்பது உறுதி என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
த கிரீன்ஸ் கட்சி 14.8 வீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது பலமான சக்தியாக விளங்குகிறது.
இது அந்தக் கட்சி வரலாற்றில் பெற்றுக்கொண்ட அதிகூடிய வாக்கு எண்ணிக்கையாகும்.
அரசியல் கூட்டணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கும் நிலை உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.