October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ருவாண்டா இனப் படுகொலை குற்றவாளி பாகோசோரா மரணம்!

ருவாண்டாவில் சுமார் 8 இலட்சம் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சிறைத் தண்டணை அனுபதித்துவந்த முன்னாள் இராணுவக் கர்னல் தியோனெஸ்டே பாகோசோரா, மாலியில்  உயிரிழந்துள்ளார்.

80 வயாதான தியோனெஸ்டே பாகோசோரா, பாமாக்கோவில் உள்ள மருத்துவமனையில் இதய பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ருவாண்டாவில் 1994 ல் இடம்பெற்ற இனப்படுகொலையில் சுமார் 8 இலட்சம் “ஹுட்டு” மற்றும் “டுட்ஸி” இன மக்கள் 100 நாட்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ருவாண்டாவின் அப்போதைய ஜனாதிபதி ஜுவெனல் ஹபரிமனா பயணித்த விமானம் 1994 ஏப்ரல் 6 அன்று சுட்டு வீழ்த்தப்பட்டமை படுகொலைகள் ஆரம்பமாக காரணமானது.

இந்த படுகொலைகளின் போது தியோனெஸ்டே தியோனெஸ்டே பாகோசோரா, ருவாண்டாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாக பணியாற்றினார்.

படுகொலைகளுக்கு தூண்டுதலாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், இவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால் பின்னர் ஆயுள் தண்டனை 35 ஆண்டுகள் தண்டனையாக குறைக்கப்பட்டிருந்தது.