இந்தியாவின் மாசடைந்த வளி குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் பிடனும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் நாஷ்விலில் இறுதிக்கட்ட விவாதத்தை மேற்கொண்டிருந்தனர்.
இவ் விவாதத்தின் போது காற்று மாசுபாடு குறித்து பேசிய டிரம்ப், சீனா, ரஷ்யாவைப் போன்று இந்தியாவிலும் காற்று மாசடைந்துள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தியாவும் ரஷ்யாவும் காலநிலை பிரச்சினையில் முதலிலுள்ள நாடுகள் எனவும் ட்ரம்ப் இதன்போது தெரிவித்தார்.
இந்தியாவில் பல அரசியல்வாதிகள் டிரம்பின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதேவேளை, சமூக ஊடகங்களில் டிரம்பின் கருத்திற்கு எதிர்ப்பு வெளியாகியுள்ளது.